பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால்,சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது..
அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில் மண்டல காலம் தினசரி நடைபெறும் பூஜைகள் குறித்த முழு விவரங்கள்…
அதிகாலை 2.30 மணிக்கு – பள்ளி உணர்த்தல்
3 மணிக்கு – நிர்மால்ய பூஜை
3.05 மணிக்கு – அபிஷேகம்
3.30 மணிக்கு – கணபதி ஹோமம்
3.45 முதல் 7 மணி வரையும், காலை 8 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
7.30 மணிக்கு – உஷபூஜை
11.30. மணிக்கு – 25 கலசாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு – உச்ச பூஜை
மதியம் 1 மணிக்கு கோவில் நடை அடைப்பு
மாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்படும்
6.30 மணிக்கு – தீபாராதனை
7 மணி முதல் – புஷ்பாபிஷேகம்
9 மணிக்கு – அத்தாழ பூஜை
இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன், இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.