வானிலை ஆய்வு மையம் – இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் …

by Editor News

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, விழுப்புரம் , திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு , வேலூர். ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் 21.11.2022ல் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

வலுவிழந்து மத்திய மேற்கு அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் தெற்கு ஆந்திரா வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகின்றது. இதனால் நேற்றும் இன்றைக்கும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் . தென் தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மணி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Related Posts

Leave a Comment