தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை பிரித்தானியாவிற்கும் வரவேற்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை மன்னர் சார்லஸ் வரவேற்கிறார்.
நவம்பர் 22ஆம் முதல் 24ஆம் திகதி வரை பிரித்தானியாவுக்கு வருவதற்கான அழைப்பை ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏற்றுக்கொண்டதாக முன்னர் அரண்மனை உறுதிப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை தனது முதல் அரசுமுறைப் பயணத்தில் வரவேற்க மன்னர் சார்லஸ் தயாராகியுள்ளார்.
இரண்டு நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக பக்கிங்ஹாம் அரண்மனையில் ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் விருந்து வழங்குவார்கள்.
மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ரமபோசா அரசியல்வாதிகளுக்கும் உரையாற்ற உள்ளார்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி செவ்வாய்க்கிழமை காலை அவரது லண்டன் ஹோட்டலில் தென்னாப்பிரிக்க ஜனாதிபதியை முதலில் வரவேற்று மன்னருடன், வரவேற்புக்காக குதிரை காவலர் அணிவகுப்புக்கு அழைத்துச் செல்வார்கள்.