தொடர்ந்து ஐந்து சதங்கள்.. பல சாதனைகளை அடித்து நொறுக்கிய தமிழக வீரர் ஜெகதீசன் …

by Editor News

அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன், 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிகெட் போட்டி தொடரில் தமிழக வீரரான ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிகெட் தொடரில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த கோப்பைக்கான ஒருநாள் கிரிகெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி இன்று பலபரிட்சை நடத்தியது.

இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன், 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார். இதன் மூலம், ரோகித் ஷர்மா, ஏடி பிரௌன், ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன்.

இதுமட்டுமில்லாது, தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், குமார் சங்ககரா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜெகதீசன் நாராயணன்.

மறுபுறம், இவருடன் விளையாடிய சாய் சுதர்சன், 102 பந்துகளில் 2 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் என 154 ரன்களை எடுத்தார். இதன் மூலம் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு, ஜெகதீசன் – சாய் சுதர்ஷன் ஜோடி, 416 ரன்களை சேர்த்தது. சமீபத்தில் வெளீயான ஐபிஎல் விடிவிப்பு பட்டியலில், ஜெகதீசன் நாராயணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.

Related Posts

Leave a Comment