சிகிச்சையின் போது பெண்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டு அரைகுறையாக இருக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வந்திருக்கிறார் அக்குபங்சர் டாக்டர். ஆடைகளை அவிழ்க்கும் போது பெண்களின் அந்தரங்கப் பகுதியிலும் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார் அந்த டாக்டர். போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் 36 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.
பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்தவர் வெங்கட ரமணா. இவர் தான் வசிக்கும் அதே பகுதியில் அக்குபங்சர் கிளினிக் நடத்தி வந்திருக்கிறார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழற்ற சொல்லி இருக்கிறார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது கழற்றிவிட்டு அரைகுறையாக இருக்கும்போது அதை ரகசியமாக வீடியோவாக எடுத்து வந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பெண்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டு இருக்கும்போது அந்தரங்கப் பகுதிகளில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் பல பெண்கள் அதிர்ச்சி அடைந்து அவரை திட்டி விட்டு சென்றிருக்கிறார்கள் . தொடர்ந்து இப்படி செய்து வரவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பசனகுடி மகளிர் காவல் நிலையத்திலும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த புகார்களின் அடிப்படையில் டாக்டர் வெங்கட ரமணா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாறி இருக்கிறது. இதை அடுத்து மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் வெங்கடா ரமணாவை கைது செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில், அந்த செல்போனில் 36 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள வெங்கடா ரமணாவிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.