நாடு முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலை தேர்வை 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர் ஆகிய குரூப்- 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது. முதல் நிலை, முதன்மை, நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு 3,22,416 பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இரண்டு பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டது. அதன்படி 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நாடு முழுவதும் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 1. 90 லட்சம் பேர் மட்டுமே குரூப் 1 தேர்வை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.