2.0 படத்தை ரிலீஸ் செய்த கையோடு இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைதது இந்தியன் 2 படத்தை இயக்க தயாரானார். ஆனால் இந்தியன் 2 இடையில் சில காரணங்களால் படப்பிடிப்பு நின்றது, தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இடையில் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க தொடங்கிவிட்டார், இன்னொரு பக்கம் பாலிவும் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணையும் படத்தையும் அறிவித்தார்.
கடந்த சில நாட்களில் ஷங்கர் வேள்பாரி படத்தை இயக்க தயாராகிவிட்டதாகவும், அப்படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
புதிய முயற்சி:
தற்போது இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்கும் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஷங்கர் தனது ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்ட ஒரு விஷயத்தை வைப்பார்.
அப்படி இந்த புதிய படத்தில் ரூ. 15 கோடி செலவில் ஒரு பாடலை ஏடுக்க இருக்கிறாராம். இது இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒரு முயற்சி என்கின்றனர்.