வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி !!

by Editor News

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதம் முதலாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 19ம் தேதி வலுவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 20ம் தேதியில் செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு நவ.21,22-ல் வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படக்கூடும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment