இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் ஆயிரத்து 283 நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Editor News

இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அரசுக்கு சொந்தமான 420 நிறுவனங்கள் உட்பட ஆயிரத்து 283 நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 29 அமைச்சகங்களும் 99 துறைகளும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து அரச நிறுவனங்களையும் பட்டியலிடும் ஆவணமொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் இவ்வாறானதொரு ஆவணம் நாட்டுக்கு தெரியப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சமீபத்திய வரவு செலவுத் திட்ட உரையின்போது வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment