ப்ரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் …

by Editor News

சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே.

ப்ரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி மற்றும் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ப்ரியாவின் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பிரியாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கியதன் அரசாணையும் அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment