நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம் ?

by Editor News

நிக்கி கல்ராணி – ஆதி:

திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களில் பிரபலமானவர்கள் நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.

அப்போது இருவரும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பாரிஸுக்கு ஹனிமூன் சென்றிந்தார்கள்.

நிக்கி கல்ராணி கர்ப்பம்:

அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் பெற்றோர்கள் ஆகவிருக்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து நிக்கி கல்ராணி – ஆதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment