வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவம்பர் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே. இதைத்தவிர வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.