தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று அனைவராலும் புகழ்ந்து வைகைப்புயல் என்ற பெயரோடு கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியிலேயே வடிவேலு வெளியேறினார்.
இப்படத்தினை தயாரித்த பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்மீது புகாரளித்திருந்தார். இதனால் வடிவேலுவுக்கு சில காலம் ரெட் கார்ட் போடப்பட்டு நடிக்கவிடாமல் செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனையை சரி செய்யவே சங்கர் – வடிவேலு சுமுகமான முடிவை எடுத்து ரெட் கார்டு கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து நாய் சேகர் ரிட்டர்ஸ் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படத்தின் அப்பத்தா பாடல் வெளியாகியுள்ளது. அசல் கோளாறு வரிகளில் வெளியான இப்பாடலை வடிவேலு பாடி பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இந்நிலையில் அப்பத்தா பாடலில் வரும், நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன், நாய்-யால நான் சீக்காளி ஆனேன் என்ற வரிகள் இயக்குனர் சங்கரை மறைமுகமாக திட்டுவது அப்பட்டமாக தெரிந்தது.
பல இடங்களில் படத்தின் டைட்டில் நாய்-ஐ வைத்து எழுதி இருந்தாலும், வடிவேலு வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது. இதனால் சங்கர் அசல் கோளாறு மீது கடும் கோபத்தில் உள்ளாராம். பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்த லீலையை விட்டு தற்போது சினிமா பாடல் வரிகளிலும் லீலைகளை ஆரம்பித்துவிட்டார் அசல் கோளாறு என்று விமர்சித்தும் வருகிறார்கள்.