சில நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து ஜி20 நாடுகள் குழுவின் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் தங்கள் கடனை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சில நடுத்தர வருமான நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியில் அவசரத் தலையீட்டிற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் தனியார் கடன் வழங்குபவர்கள் உடனடியாக அதற்கு பதிலளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு அவசரமாக நிதிப் பாதுகாப்பு தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதால், இந்த பாதுகாப்பு அவசரமாகத் தேவைப்படுவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.