வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது …!

by Editor News

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இந்த காற்றழுத்தத்தினால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை, அதிக கன மழை பெய்து வருகிறது . டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிக கனமழை பெய்து உள்ளதால் அம்மாவட்டம் வெள்ளக்காடாக இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் . மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று அறிவித்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், 19ஆம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

Related Posts

Leave a Comment