விதவிதமான உருளைக்கிழங்கு ரெசிபிகள் …

by Editor News

உருளைக்கிழங்கு இல்லாதே சமையல் இருக்கவே முடியாது. அதுவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான இதை வேக வைத்து, பொரித்து என எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் இதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இந்நிலையில் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்தால் சண்டைப்போட்டு சாப்பிடுவோம் அல்லவா.. இதோ விதவிதமான சுவையுடன் செய்யப்படும் உருளைக்கிழங்கு ரெசிபிகள் குறித்து இங்கே நாமும் தெரிந்துக் கொள்வோம்.

1. வித்தியாசமான ஸ்டைலில் உருளைக்கிழங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமனி கிரேக்க உருளைக்கிழங்கு ரெசிபியை ட்ரை பண்ணலாம். இந்த ரெசிபியை செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கு மற்றும் குடை மிளகாயை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டையும் எடுத்துக் கொண்டு எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டுமபின்னர் கடாயில் எடுத்துக்கொண்டு உப்பு, மிளகு சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனுடன் சிக்கன் குழம்பை ஊற்றி மீடியம் பிளேமில் வைத்து பழுப்பு நிறம் வரும் வரை சுமார் 1 மணி நேரத்திற்கு வறுத்தெடுக்க வேண்டும். உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை இரண்டும் சேர்த்து தற்போது சுவையான லெமனி கிரேக்க உருளைக்கிழங்கு ரெசிபி ரெடியாகிவிட்டது.

2. நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை நீங்கள் செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின்னர் முழுவதுமாக உரிக்காமல் மேல் பகுதியில் மட்டும் கொஞ்சம் உரித்துவிட்டு அதனுடன் வெண்ணெய், மிளகு மற்றும் கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளிப்பு கிரீம், போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதோடு மட்டுமின்றி உருளைக்கிழங்கில் காலிப்ளவர், கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது உங்களுக்குப் பிடித்த அசைவ உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்குடன் இந்த உணவுப்பொருள்களைச் சேர்க்கும் போது உங்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

3. முதலில் உருளைக்கிழங்கு தோலை உரித்தெடுத்துப் பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை சுமார் 10-15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.பின்னர் சிறிதளவு பூண்டினைத் தட்டி எடுத்துக் கொண்டு பசும்பால் ஊற்றி வைத்து வேக வைக்க வேண்டும். இதனையடுத்து உருளைக்கிழங்கு வெந்தவுடன் மசித்து எடுத்துக்கொண்டு பூண்டு பாலைச் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக்கொண்டால் சுவையான ரெசிபி ரெடியாகிவிட்டது. இதனை பாத்திரத்தில் மாற்றி அதற்கு மேல் சீஸ் மற்றும் வெங்காயத் தாள் வைத்து பரிமாறலாம். இந்த ரெசிபி உங்களுக்கு கூடுதல் சுவையோடு உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.

4. வேக வைத்த உருளைக்கிழங்கு சாலட் செய்வதற்கு முதலில் உருளைக்கிழங்கின் தோலை உரித்தெடுக்க வேண்டும். பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எண்ணெய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மைக்ரோஓவனில் சுமார் 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.முந்திரி அல்லது வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கடாயில் வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய டம்ளரில் ஆப்பிள் சைடர் வினிகர், எண்ணெய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து காலே கீரையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.மைக்ரோஓவனில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். இதனுடன் கிரீன் ஆப்பிள், வறுத்த நட்ஸ் வகைகள் மற்றும் ஏற்கனவே கலக்கி வைத்துள்ள ஆப்பிள் சைடர் வினிகர், எண்ணெய் மற்றும் பூண்டு சாறை ஊற்ற வேண்டும். இதனுடன் கீரையும் சேர்க்கும் போது நல்ல சத்துள்ள மற்றும் சுவையான சாலட் ரெடியாகிவிட்டது.

Related Posts

Leave a Comment