தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை இனி சீனா தொடரக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது, திபெத், ஹொங்கொங்கிலும், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் குறித்து சீன ஜனாதிபதியிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்தை நடத்தினார்.
உக்ரைனில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்படுவதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.