நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா?

by Editor News

ஒரு குழந்தை ஊனமாக பிறக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்வதால் தான் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் தம்பதிகள் தங்கள் மூதாதையரின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு கடத்துவதால் அந்த மரபணுக்கள் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதனால் குழந்தைகள் ஊனமாக பிறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

எனவே நெருங்கிய உறவில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அடுத்து நெருங்கிய உறவில் திருமணம் செய்து பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது

ஆனால் அதே நேரத்தில் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மட்டுமின்றி ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் ரத்தக் கொதிப்பு, மஞ்சள்காமாலை, நீரிழிவு நோய், குறைப்பிரசவம் ஆகியவை காரணமாகவும் ஊனமாக குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment