பல கோடி நஷ்டம்.. உடைந்துபோன நடிகர் விஜய் செய்ய மிகப்பெரிய விஷயம்

by Editor News

தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பல கோடி நஷ்டம்

விஜய் நடிப்பில் 50வது திரைப்படமாக சுறா வெளிவந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

இதுவரை இப்படியொரு தோல்வியை தன்னுடைய திரைவாழ்க்கையில் விஜய் பார்த்ததே இல்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இப்படம் சுமார் ரூ. 10 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

எதிர்பார்க்காத கம் பேக்

2010ஆம் ஆண்டு வெளிவந்த சுறா படத்தின் தோல்வியின் மூலம் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்த விஜய், அடுத்த இரண்டே ஆண்டுகளில் துப்பாக்கி எனும் மாபெரும் வெற்றி படத்தின் மூலம் யாரும் எதிர்பார்க்காத கம் பேக் கொடுத்தார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படம் ரூ. 120 கோடி வசூலை தொட்டது. அதுவே விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment