அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், அந்நாட்டுவிமான படை சார்பில் 2-ம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட விமானங்களில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா உள்ளிட்ட விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. அப்போது இந்த இரு விமானங்களும் திடீரென ஒன்றோடு ஒன்று மோதி தரையில் விழுந்து நொறுங்கியது. நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற சிறிய விமானம் மோதியது. இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் உடைந்து சிதறியதோடு, கீழே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தை பார்வையாளர்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள் என, மேயர் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
OMG – two planes collided at ‘Wings Over Dallas’ air show today
This is crazy
— James T. Yoder (@JamesYoder) November 12, 2022