தோட்டத்தில் வளரும் அனைத்து செடிகளுக்கும் பண்புகள் ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பண்புகள்/சிறப்பியல்புகள் உள்ளதோ, அதேப் போன்று செடிகளுக்கு ஒவ்வொரு பண்புகள் இருக்கும். அந்த வகையில் கோடையில் தான் ஒருசில செடிகள் நன்கு வளரும்.
அதிலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் அடிக்கும் வெயிலின் அளவை சொல்லவே வேண்டாம். ஏனெனில் அந்த வகையில் வெயிலானது கடுமையாக, வெளியே நடக்க முடியாத அளவில் வெயிலானது அடிக்கும். அப்படியிருக்க, அங்கு அனைத்து விதமான செடிகளும் வளர வாய்ப்பில்லை. ஆனால் அந்த நேரத்திலும் நன்கு வளர்வதற்கு ஒருசில அழகான செடிகள் உள்ளன.
அந்த செடிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தோட்டத்தில் வைத்து தோட்டத்தை பூக்களால் அழகாக பூத்துக் குலுங்க வையுங்கள்.
கருங்கற்றாழை
இது ஒருவகையான கற்றாழை செடியாகும். இந்த செடியில் பூக்கள் பூக்காது. மாறாக அந்த செடி பார்ப்பதற்கே, தாமரை மலர் மலர்ந்திருப்பது போன்று அழகாக காணப்படும். இந்த செடி நேரடியான சூரிய வெளிச்சம் இருந்தாலும், தண்ணீரின்றி நீண்ட நாட்கள் இருக்கும்.
மூங்கில்
மூங்கில் எந்த ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இருக்கக்கூடியது. இந்த மரம் மிதமான அல்லது அதிகமான வெப்பத்திலும் வளரக்கூடியது. குறிப்பாக, இந்த மூங்கில் செடியின் மேல் சூரியவெப்பம் நேராக படுமானால், இது எளிதில் உயரமாக வளரும். ஆகவே அவ்வப்போது அதனை வெட்டிவிட வேண்டும்.
மணிவாழை
மணிவாழை எனப்படும் கன்னா செடியும், கடும் வெயிலில் நன்கு வளரக்கூடியது. இந்த செடியில் பல வண்ணங்களில் மலர்கள் மலரும். அதிலும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சால்வியா
சால்வியா என்னும் மலர் செடி, அடர்ந்த ஊதா நிறப் பூக்களுடன், வெப்பமான சூழ்நிலையிலும் செழிப்புடன் வளரக்கூடியது.
பென்டாஸ் செடி
நல்ல கோடை வெயிலில் வளர்ப்பதற்கு ஏற்ற செடி தான் பென்டாஸ். மேலும் இது ஒரு நீண்ட கால அலங்காரச் செடிகளுள் ஒன்று. இதில் மலர்கள் நன்கு கொத்து கொத்தாக அழகாக மலரும். இது தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஏற்ற ஒரு கோடை கால செடியாகும்.
வாழைமரம்
இந்த மரத்தை கொல்லைப்புறத்தில் நிச்சயம் வளர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இதனையும் தோட்டத்தில் வளர்த்தால், இது நல்ல நிழலைத் தருவதோடு, கோடையில் நல்ல காற்றையும் கொடுக்கும்.
பலூன் மலர்
இந்திய தோட்டங்களில் பலூன் மலர்கள் மிகவும் பொதுவானவை. இது கொடியாக படர்ந்து வளரக்கூடிய மற்றும் ஒரு அழகான ஊதா நிற பூக்களைக் கொண்டது. இது ஒரு வற்றாத ஆண்டு முழுவதும் மலரக்கூடிய செடியாகும்.
சூரியகாந்தி
இதன் பெயரைக் கொண்டே, இது சூரிய வெப்பத்திலும் நன்கு வளரக்கூடியது என்பதை அறியலாம். இந்த செடிக்கு சூரியன் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அது சூரியன் உள்ள திசையை நோக்கியே இருக்கும்.
அச்சில்லியா (Yarrow)
அச்சில்லியா என்னும் யாரோவ் செடி, கொத்து கொத்தாக பூக்களைக் கொண்டது. இதுவும் வருடம் முழுவதும் வாடாத அழகான பூக்களைக் கொண்டது.