238
137 நாட்களுக்கு பின்னர் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்தாண்டு தீபாவளிக்கு முன்பு வரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அதிகபட்சமாக 110 ரூபாய் வரை விற்பனையானது.
137 நாட்களுக்கு பிறகு இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்தது.
உக்ரைன்-ரஷ்யா போர் சூழலால் பிப்ரவரி மாதம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்தது.
புதிய விலையின்படி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102 ரூபாய் 16 காசுகளாக விற்கப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்துள்ளது.