75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் தடுப்பூசி அளவை பெற பதிவு செய்யலாம்.
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைத்து வயதினரிடமும் தொற்று வவீதம் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
இந்த நிலையில், பிரித்தானியாவின் தடுப்பூசி ஆலோசகர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் தடுப்பூசி அளவு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் ஏற்கனவே ஸ்பிரிங் பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த இலையுதிர்காலத்தில் ஒரு பரந்த பூஸ்டர் திட்டம், அதிக நபர்களை உள்ளடக்கியது.
தடுப்பூசிகள் கடுமையான நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டாலும், காலப்போக்கில் பாதுகாப்பு குறைகிறது.