குளிர்காலத்தில் அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி?

by Editor News

தோட்டம் அமைப்பது என்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும் விஷயமாகும். ஆனால் இந்த அழகூட்டும் காரியங்களை செய்ய நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் இவைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். பனி பெய்தால் போதும் உங்கள் தோட்டத்தில் உள்ள சிறிய செடிகள் எல்லாம் குளிரில் கருகி விடும். இந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய பூக்கள் பெரும் சேதத்தை சந்திக்கின்றன. ஆனால் நாம் சிறிது நேரம் செலவு செய்தால் இத்தகைய சேதங்களை தவிர்க்க முடியும்.

குளிர்காலத்தில் தோட்டத்தை பராமரிப்பது எப்படி என்று பல குறிப்புகள் உள்ளன. குளிர்காலத்தின் கடுங்குளிர் தன்மையை எண்ணி நாம் இந்த அழகிய பூக்களை பாதுகாக்கும் வழிமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. குளிர் கால பனி மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை செடிகளையும் அதன் பூக்களையும் பாழ்படுத்துகின்றன. மேலும், இந்த பருவ காலத்தில் பராமரிப்பிற்காக சற்றே அதிகமான நேரமும் மற்றும் போதிய அளவு அக்கறையையும் கொடுக்கும் போது நமது தோட்டம் ஒரு சிறந்த வண்ணமயமான தோட்டமான ஒளிரும் என்பது திண்ணம்!

சரியான அளவு வெப்பநிலையை பராமரிப்பது மற்றும் பனியிலிருந்து பாதுகாப்பு அளிப்பது ஆகியவை பூக்களை பாதூகப்பதில் மிகவும் அவசியமான விஷயமாக உள்ளன. பூக்களுக்கு தேவையான அளவு இதமான உணர்வை கொடுக்கும் வழிகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவது நல்லது. பனியிலிருந்து தப்புவிக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக ஒரு நிழல் குடை அமைத்துக்கொடுத்தால் மிகுந்த பயனாக இருக்கும். இந்த தருணங்களை உங்கள் செடிகளுடன் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் மன திருப்தியும் அடையுங்கள். பூக்களை கடுமையான குளிர் காலத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது மிக முக்கிமானதாகும். பூக்களை மெல்லிய மடிப்புகளால் மூடிவைக்க வேண்டும். இவை பூக்களை பெரும் குளிரிலிருந்தும் வறண்ட காற்றிலிருந்தும் காக்கின்றது. இதை செய்யும் போது நாம் பூவின் இதழ்கள் கிழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தொட்டியில் நட்டு வையுங்கள்: செடிகளை தொட்டியில் நட்டு வைப்பதன் மூலம் நமது தேவைக்கேற்ப அதை நாம் இடமாற்றிக் கொள்ள முடியும். பூக்கள் பூக்கும் செடிகளை குளிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். வெயில் வரும் காலத்திலும் நாம் அதற்கேற்ற வகையில் எளிதில் இடமாற்றிக் கொள்ள முடியும்.

உள்ளே வைத்தல்: பூக்கள் பூக்கும் செடிகளை குளிரிலிருந்து பாதுகாக்க நமது வீட்டிற்குள் அவற்றை வைத்து பாதுகாக்கலாம். இவை வீட்டிற்கு மேலும் அழகூட்டி அலங்கார பொருளாக அமைந்து குளிர்காலத்தில் வீட்டை சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

சரியான நேரத்தில் செய்வது: மெல்லிய பூக்களை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளை குளிர்காலம் வரும் முன்பே செய்யத் தொடங்க வேண்டும். குளிர் காலம் தோன்றிய பின் நாம் முயற்சிகள் மேற்கொண்டால் அவை வீணே!

தற்காலிக கிரீன் ஹவுஸ்: தற்காலிக கிரீன் ஹவுஸ் ஒன்றை அமைத்து பூ பூக்கும் செடிகளை அதில் வைத்து பாதுகாக்க வேண்டும். அதிக அளவு பணம் செலவு செய்ய விரும்பாவிட்டால் எளிய முறையில் பிபீசி பைப்புகள் (PBC) மற்றும் விஸ்குயின் (Visqueen) ஆகியவைகளால் செய்த வீடு போன்ற அமைப்பில் செடிகளை வைத்து பாதுகாக்கலாம்.

மூடி வையுங்கள்: கடுமையாக குளிரிலிருந்து செடிகளை பாதுகாக்க நமது வீட்டிலிருக்கும் பழைய போர்வை அல்லது துணி ஆகியவற்றை கொண்டு செடிகளை மூடி வைக்கலாம். இதை இரவு நேரத்தில் மட்டும் செய்தால் நல்லது. வெயிலில் திறந்து வைக்க மறந்து விட வேண்டாம்.

குளிர்காலத்திற்கு முன் உரமிடுங்கள்: குளிர்காலம் வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்னரே உரமிடுவது சிறந்ததாகும். அதிக அளவு வெட்டி விடுவவது மற்றும் இதர வேலைகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இவை புதிய பூக்கள் உருவாக விடாமல் தடுக்கும். குளிரிலிருந்தும் பாதுகாக்கும்.

கோணியை பயன்படுத்துங்கள்: பூ பூக்கும் செடிகளை குளிரிலிருந்தும் மற்றும் உறைய வைக்கும் பனியிலிருந்தும் காத்துக் கொள்ள கோணி உதவும். செடிகளை இதை வைத்து மூடி பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியில் உதிர்ந்த இலைகளை போட்டு மூடுவது செடிகளை உறைய விடாமல் காத்துக்கொள்ளும்.

அட்டை வைத்து மூடுங்கள்: பூ பூக்கும் செடிகளை ஒரு அட்டை வைத்து மூடி வைத்தால் குளிர்கால வறண்ட காற்றிலிருந்து செடிகளை பாதுகாக்க முடியும். செடிக்கும் அட்டைக்கும் நடுவே உதிர்ந்த இலைகளையும் பழைய காகிதங்களையும் போட்டு வைத்தால் செடிகளுக்கு உரமாகவும் இதமூட்டுபவையாகவும் அமையும்.

Related Posts

Leave a Comment