தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பதிவானதை விட 5 வாக்குகள் கூடுதலாக இருந்ததாகக் கூறி ஐசிரி கணேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ம் தேதி ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான அணியும், இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் சென்னை நுங்கம்பாக்கம் சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (மார்ச் 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ) எண்ணப்பட்டு வருகிறது. நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ச் பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது துணைத் தலைவருக்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.