கடலை மாவு போண்டா செய்வது எப்படி?

by Editor News

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 300 கிராம்,
பெரிய வெங்காயம் – 3,
ஆப்ப சோடா – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

செய்முறை :

கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை போட்டு கலந்து கொள்ளவும்.

கடலை மாவு போண்டா மொறுமொறுவென்று ரொம்பவே சுவையாக வருவதற்கு ஒரு ரகசியமுண்டு. கடைகளில் பெரும்பாலும் இதனை பின்பற்றி தான் மொறுமொறு போண்டாக்கள் செய்வது வழக்கம். ஒரு குழி கரண்டி அளவிற்கு எண்ணெய் சூடேற்றி கொள்ளுங்கள். சூடான எண்ணெயை இதனுடன் கலந்து பிசைந்தால் போண்டா சுடுவதற்கு மொறுமொறுவென்று சூப்பராக வரும்.

எண்ணெய் கலந்த பின்பு தேவையான அளவிற்கு தண்ணீரை தெளித்து தெளித்து போண்டா மாவு பிசையுங்கள். கெட்டியான போண்டா மாவு பதத்துக்கு மாவு பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக இல்லாமல், பெரிதாக போட்டால் மேலே மொறுமொறுவென்றும் உள்ளே சரியாக வேகாமல் இருக்கலாம் எனவே சிறு சிறு போண்டாக்களாக போட்டு எடுப்பது நல்ல ருசி கொடுக்கும்.

Related Posts

Leave a Comment