குடும்பத்தை சேர்க்க சரஸ்வதி போடும் சபதம்.. சவாலை ஏற்ற கோதை அம்மா மகன் கார்த்திக்!

by Column Editor

சரஸ்வதி, 12 பாஸ் ஆகிவிட்டால் மீண்டும் தமிழுக்கு ஜிஎம் பதிவு கொடுத்து மரியாதையாக நடத்த வேண்டும் என்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் திரைக்கதை மின்னல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் – சரஸ்வதி திருமணத்திற்கு பின்பு திரைக்கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் அரங்கேற சீரியல் டி. ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இத்தனை நாட்களாக கோதை அம்மா தமிழ் மற்றும் சரஸ்வதியை பற்றி தப்பாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் மெல்ல மெல்ல அவருக்கு எல்லா உண்மைகளும் தெரிய வருகிறது. ஆஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பிய உடனே தமிழையும்சரஸ்வதியையும் கிளம்பி வர சொன்னவர், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்தார். இனி சரஸ்வதி வீட்டுக்கு தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என முடித்து கொண்டார். அதுமட்டுமில்லை சரஸ்வதிக்கு கொடுத்த மொத்த சீர் வரிசையையும் அவர் திரும்பி தந்து விட்டார்.

அடுத்த நாளே தமிழின் ஜிஎம் பதவி பறிக்கப்பட்டது. இப்போது சொந்த கம்பெனியில் தமிழ் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த விஷயத்தை கேட்டு சரஸ்வதி மனம் நொந்து போகிறார். பொய் சொல்லி செய்த கல்யாணத்தால் தமிழுக்கு இப்படியொரு நிலை வரும் என அவர் நினைக்கவில்லை. கோதை அம்மா, அளவுக்கு அதிகமாக சரஸ்வதியையும் தமிழையும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் இப்படி பொய் சொன்னது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோதை வீட்டில் இப்படியொரு பிரச்சனை போய் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட சந்திரகலா, மருமகன் கார்த்திக் மூலம் மொத்த குடும்பத்தையும் பிரிக்க நினைக்கிறார்.

அதாவது, கார்த்திக்கு தப்பு தப்பாக சொல்லி கொடுத்து குடும்பத்தை 2 ஆக பிரிக்க பிளான் செய்கிறார். இந்நிலையில் கம்பெனிக்கு வரும் சரஸ்வதி தமிழின் நிலையை பார்த்து வருத்தப்படுகிறார். அப்போது தான் சரஸ்வதி, கார்த்திக்கிடம் சென்று பேசுகிறார். அண்ணி என்ற மரியாதை இல்லாமல் கார்த்திக் ஒருகாமையில் பேசுவதை தமிழ் ஃபிரண்ட் நமச்சி கண்டிக்க செய்கிறார். ஆனால் கார்த்திக் சரஸ்வதி பிளஸ் டூ ஃபையில் என்பதை குத்திக்காட்டி அசிங்கப்படுத்துகிறார். அப்போது தான் சரஸ்வதி எம்.பி. ஏ படித்து பட்டம் வாங்குவேன் என சொல்ல, பதிலுக்கு கார்த்திக் மோசமாக பேசி விடுகிறார்.

கோபத்தில் சற்றும் யோசிக்காமல் சரஸ்வதி நான் எம்.பி.ஏ படிப்பேன் என சொல்ல, முதலில் பிளஸ் டூ பாஸ் ஆகுங்கள் என்கிறார் கார்த்திக். சவாலை ஏற்கும் சரஸ்வதி, 12 பாஸ் ஆகிவிட்டால் மீண்டும் தமிழுக்கு ஜிஎம் பதிவு கொடுத்து மரியாதையாக நடத்த வேண்டும் என்கிறார். அந்த சவாலை கார்த்திக்கும் ஏற்றுக் கொள்கிறார். இனி வரும் எபிசோடுகளில் சரஸ்வதி பிளஸ் டூ பாஸ் செய்யும் எபிசோடுகளை ரசிகர்கள் காண்பார்கள். வழக்கம் போல் சந்திரகலா இதில் பல தடைகளை கொடுக்க தான் போகிறார்.

Related Posts

Leave a Comment