இதில் கலந்து கொள்ள வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபல இளம் நடிகை ஒருவர் வரப்போவதாக ஏற்கெனவே தகவல்கள் பரவிய நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன், இதுதான் காரணம் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார் அந்த இளம் நடிகை. யார் அவர்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
மிகப் பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியாக உருவெடுத்து இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனும் சூப்பர் டூப்பர் ஹிட். நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியான இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அனைத்து தரப்பினரும் ரசித்து வருகின்றனர். இளைஞர்களின் ட்ரெஸ் பஸ்ஸடர் நிகழ்ச்சி என்றே இதை சொல்லலாம். கவலைகளை மறந்து சிரித்து மகிழ நினைப்பவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தாலே போதும்.
10 போட்டியாளர்கள், 10 கோமாளிகள் என தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். ராகுல் தாத்தா மற்றும் மனோ பாலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது வைல்டு கார்டு குறித்த பேச்சு வார்த்தை இணையத்தில் உலா வர தொடங்கி விட்டது. சென்ற வாரம் ஹே சினாமிகா பட குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக வந்து இருந்தனர்.அவர்களும் இந்த நிகழ்ச்சியை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கலந்து கொள்ள வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் தான் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சந்தானம், கவின், அஸ்வின் படத்தின் ஹீரோயின் தேஜூ அஸ்வினிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
சமூகவலைத்தளங்களில் தேஜூ தான் அடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்டு கார்டு போட்டியாளர் என பலரும் போஸ்டுகளை ஷேர் செய்து இருந்தனர். ஆனால் இந்த தகவலை தற்போதுதேஜூ அஸ்வினி மறுத்துள்ளார். அதுமட்டுமில்லை அதற்கு அவர் ஒரு காரணத்தை கூறியுள்ளார். தேஜுவிடம் இந்த கேள்வியை அவரின் ரசிகர்க் ஒருவர் இன்ஸ்டாவில் கேட்டு இருக்கிறார்.
அதற்கு தேஜூ, ‘நோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன். எனக்கு சமைக்கவே தெரியாது” என்று விளக்கமளித்துள்ளார். இந்த செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமையம், யார் அடுத்த வைல்டு கார்டு என்ட்ரி எனவும் அவர்கள் தேட தொடங்கிவிட்டனர்.