இட்லி உப்புமாவை இந்த பதத்தில் செய்து கொடுத்துப்பார்கள். இன்னொரு முறை போட சொல்லி தட்டை நீட்டுவார்கள்.
உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும். கட்டாயம் சாப்பிட வேண்டுமா என சலித்துக்கொள்வார்கள். ஆனால் இட்லி உப்புமாவை இந்த பதத்தில் செய்து கொடுத்துப்பார்கள். இன்னொரு முறை போட சொல்லி தட்டை நீட்டுவார்கள். மிச்சமின்றி செய்த கடாய் காலியாகும். ரெசிபி இதோ…
தேவையான பொருட்கள் :
இட்லி – 6
நல்லெண்ணெய் – 2 tbsp
கடுகு – tsp
உளுந்து – 1 tbsp
கடலை பருப்பு – 1/2 tbsp
வேர்க்கடலை – 1 tbsp
முந்திரி – 10
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிதளவு
சாம்பார் பொடி – 1 tbsp
மிளகுத்தூள் – 1/2 tbsp
உப்பு – தே.அ
செய்முறை :
முதலில் இட்லியை நன்கு உதிரி உதிரியாக இருக்குமாறு உதிர்த்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளியுங்கள்.
பொன்னிறமாக வரும் வேளையில் வேர்க்கடலை சேர்த்து வதக்குங்கள்.
பின் முந்திரி சேருங்கள். பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
வதங்கியதும் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்கு மசாலா சேர பிரட்டி எடுங்கள்.
நன்கு பிரட்டியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி… சுட சுட பரிமாறுங்கள்.