போஸ்ட் ஆபீஸ் முதலீடு திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியானது ஏப்ரல் 1 முதல் முதலீட்டாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு திட்டம் தொடங்கியவர்கள் கட்டாயம் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தொடங்கியுள்ள சேமிப்பு திட்டத்தில் நீங்கள் முறையாக வட்டி பெற கட்டாயம் இதை செய்ய வேண்டும். காரணம், வரும் ஏபரல் 1 முதல் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் விதிமுறைகள் அப்டேட் ஆகுகின்றன. அதுக் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் மட்டுமில்லை எந்த ஒரு சேமிப்பு திட்டத்திலும், முதலீடு திட்டத்திலும் பணத்தை போடுவது வட்டிக்காக தான். அந்த வட்டி முறையாக கிடைத்தால் தான் போட்ட பணத்துக்கு லாபம். இல்லையென்றால் முதலீடு நஷ்டத்தில் தான் முடியும். அதனால் தான் பெரும்பாலான மக்கள், ரிஸ்க் இல்லாத முதலீடு என கருதப்படும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய அதிகம் விரும்புகின்றனர். இது ஒருபக்கம் இருக்கட்டும், போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து, வட்டி பெற்று வருபவர்கள் கவனத்திற்கு ஏப்ரல் 1 முதல் ரூல்ஸ் மாறுது தெரியுமா?
போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மாதாந்திர முதலீட்டுத் திட்டம்( MIS) எஸ்சிஎஸ்எஸ் (SCSS) மற்றும் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (TD) ஆகியவற்றிலிருந்து இனி வட்டிப் பணத்தை ரொக்கமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியானது
ஏப்ரல் 1 முதல் முதலீட்டாளர்களின் சேமிப்புக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் வட்டியை மாதம் மாதம் அல்லது காலாண்டு வீதம், வருஷத்துக்கு 1 முறை எடுக்கும் பழக்கம் கொண்ட அனைவருக்கும் ஏபரல் 1முதல் இது தான் செயல்முறை.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதலீடு கணக்குடன் வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் சேமிப்புக் கணக்கை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான் உங்களுக்கு வட்டி பணம் கிடைக்கும் இல்லையென்றால் உங்களுக்கு தான் சிக்கல். இதனால் வரும் , மார்ச் 31, 2022க்கு முன் தபால் அலுவலகத் திட்டத்தை சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும். இப்படி இணைத்துவிட்டால் இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் வட்டியானது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு அல்லது வங்கி கணக்கில் போடப்பட்டுவிடும். எனவே, இதுவரை போஸ்ட் ஆபீஸ் கணக்குடன் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைக்காதவர்கள் உடனே இதை செய்திடுங்கள்.