மெளன ராகம், 2வது பாகத்தில் காதம்பரி மாதிரியே வில்லி ஆகிவிட்டார் அவரின் மகள் ஸ்ருதி
மெளன ராகம் 2 சீரியலில் வில்லியாக மாறிவிட்ட ஸ்ருதி பற்றிய உண்மையை தனது அண்ணன் வருணிடம் சொல்ல தயாராகுகிறார் தருண். ஆனால் அதற்குள் சீரியலில் ஒரு முக்கியமான ட்விஸ்ட் .என்னது அது? வாங்க பார்க்கலாம்.
மெளன ராகம் 2 சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக மாறியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் லிஸ்டில் இந்த தொடருக்கு இடம் உண்டு. காதல், ரொமான்ஸ் ஒருபக்கம், இருந்தாலும் தற்போது இந்த சீரியலிலும் வில்லத்தனம் அதிகமாகிவிட்டது. முதல் பாகத்தில் குழந்தையாக இருந்த ஸ்ருதி, இப்போது 2வது பாகத்தில் காதம்பரி மாதிரியே வில்லி ஆகிவிட்டார். அதுவும் சத்யா தான், மல்லிகாவின் மகள் சக்தி என்ற உண்மை தெரிந்ததில் இருந்து ஸ்ருதியின் சுயரூபம் வெளியே தெரிய தொடங்கி விட்டது.
பல போரட்டங்களுக்கு பிறகு சத்யாவும் வருணும் சேர்ந்து வாழ தொடங்கி விட்டனர். இது வருணின் அத்தைக்கு பிடிக்கவில்லை. இவர்களை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல கெடுதல்களை செய்து வருபவருடன் இப்போது ஸ்ருதியும் சேர்ந்துக் கொண்டார். நேற்றைய எபிசோடில் ஸ்ருதி, சத்யாவை அதட்டி பேசியது, வேலை வாங்கியது, வருணுக்கு கோபத்தை தந்தது. உடனே அவர், ஸ்ருதியிடம் சண்டைக்கு போனார். இதைப்பார்த்த சத்யாவுக்கு அப்படியொரு ஷாக். இப்படி இருக்கையில் இன்றையஎபிசோடில் சத்யா, கோபமாக இருக்கும் வருணை சமாதானம் செய்து ஆபிஸூக்கு அனுப்புகிறார். இதே போல், முதன் முறையாக மியூசிக் ஸ்கூலுக்கு ஸ்ருதி தருணுடன் செல்கிறார்.
ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக வருண், மியூசில் ஸ்கூலுக்கு வந்து இருப்பதை பார்த்து தருண் அவரிடம் சென்று பேச முயற்சி செய்கிறார். எவ்வளவு மன்னிப்பு கேட்டும் வருண், தருணை ,மன்னிப்பதாக தெரியவில்லை. எதனால் இப்படியொரு காரியத்தை செய்தேன் தெரியுமா? என்று ஆவேசத்தில் ஸ்ருதி பற்றிய உண்மையை சொல்ல தருண் நினைக்கிறார். ஆனால் அதற்குள் சத்யாவுக்கு இதனால் பிரச்சனை வரும் என எண்ணி மொத்த உண்மையையும் மறைத்து விடுகிறார்.
இதற்குள், வீட்டுக்கு வரும் ஸ்ருதி, சத்யாவிடம் கார்த்திக் கிருஷ்ணா பேசிக் கொண்டிருப்பதை கேட்டு கோபத்தில் ஃபோனை வாங்குகிறார். ஸ்ருதி பற்றி சத்யாவிடம் கார்த்திக் கிருஷ்ணா பேசியதை கேட்டு அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே கார்த்திக் கிருஷ்ணா உனக்கு யார்? என்று சண்டைக்கு செல்கிறார். ஸ்ருதிக்கு சத்யா – மல்லிகா பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது என்பது இதுவரை சத்யாவுக்கு தெரியாது.