பொதுவாக நம்மில் சிலருக்கு உதட்டை சுற்றி குறிப்பாக அதன் விளிம்பு பகுதியில் கருமை காணப்படுவது உண்டு.
குறிப்பாக இதற்கு ஹார்மோன் சமநிலையின்மை, பராமரிப்பின்மை போன்ற பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றது.
இதனை ஒரு சில எளிய வழிகள் கொண்டு நீக்க முடியும். தற்போது அவற்றை எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதன் ஒரு பாதியை கொண்டு உதட்டின் ஓரங்களை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதை தினமும் தூங்கும் முன் செய்யுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் கழுவிவிடுங்கள்.
ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து அதை உதட்டின் ஓரங்களை சுற்றிலும் தடவி மசாஜ் செய்யுங்கள். பின் ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவிவிடுங்கள்.
மஞ்சளை 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் காய்ச்சாத பால் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்கு கலக்க பேஸ்ட் பதத்தில் வரும். அதை உதட்டின் ஓரங்களை சுற்றிலும் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின் கழுவிவிடுங்கள்.
ரோஸ் வாட்டர் சருமப் பராமரிப்பில் இன்றியமையாததாகும். காட்டனை ரோஸ் வாட்டரில் முக்கி அதை உதட்டில் ஓரத்தில் ஒத்தி எடுங்கள். தினமும் இதை செய்து வாருங்கள்.
கற்றாழை சதையை உதட்டில் ஓரங்களில் தடவி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் ஊறியதும் முகத்தை கழுவிவிடுங்கள்.
இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங்கள். மறுநாள் காலை கழுவிவிடுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள்.
ஒரு துண்டு வெள்ளரியை உதட்டின் ஓரங்களில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து தடவ கூடுதல் பலன் கிடைக்கும்.