அவரைக்காயை தேங்காய் சேர்த்து மணமணக்க செய்தால் வீட்டில் இருப்பவர்கள் கூடுதலாகவே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகள் கூட மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள்.
அவரைக்காயை பொரியலாக காரக்குழம்பு , மிளகு குழம்பு, பூண்டு குழம்பு போன்ற எந்த குழம்பு வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். அதிலும் தேங்காய் சேர்த்து மணமணக்க செய்தால் வீட்டில் இருப்பவர்கள் கூடுதலாகவே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். குழந்தைகள் கூட மிச்சம் வைக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். சரி… எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அவரைக்காய் – 250 கிராம்
கடுகு – 1/2 tsp
உளுத்தம் பருப்பு – 1 tsp
பூண்டு – 5
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1/2 tsp
மிளகாய் தூள் – 1 tsp
உப்பு – தே.அ
துருவிய தேங்காய் – 1/2 கப்
செய்முறை :
அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளியுங்கள். பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
பின் அவரைக்காயை சேர்த்து கிளறுங்கள். அடுத்ததாக மஞ்சள் மற்றும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து அதோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறுங்கள்.
தட்டுப்போட்டு மூடி 5 நிமிடங்களுக்கு வேக விடுங்கள்.
வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் அவரைக்காய் பொரியல் தயார்.