உங்கள் பாதங்களை அழகாக்கும் டிப்ஸ்…!

by Column Editor

கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும். செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள்.

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது அவசியம். அப்படி செய்யவில்லை என்றால் புண்கள் மற்றும் நகங்கள் சொத்தையாக வழிவகுக்கும்.

மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்.

படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

நீங்கள் காலணி அணிபவரா, அப்படியானால் சாயம் கலந்த செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை உபயோகியுங்கள். காலனிகளை அணியும் முன் உள்ளே ஏதும் கூரான குப்பைகள் இருக்கிறதா என்று பரிசோதித்த பின் அணியுங்கள்.

இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து, பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதால் பாதங்கள் மிருதுவாக மாறும். பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

மருதாணியை அரைத்து பாத வெடிப்பு அதிமாக இருக்கும் இடத்தில் பூசி வந்தால் பாதவெடிப்புகள் குணமாகும். நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க ஒரு சிறந்த வழி முறையாகும்.

Related Posts

Leave a Comment