நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை என்பது வசந்த காலத்தின் துவக்கத்தை குறிக்கிறது. வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் ஹோலி பண்டிகை வட நாட்டு மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் ஒருவர் மீது ஒருவர் வண்ண சாயங்களை பூசி , தண்ணீர் பீய்ச்சி அடித்து பண்டிகையை கொண்டாடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஹோலி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. தற்போது தொற்று குறைந்து வருவதால் ஹோலி பண்டிகை இந்த வருடம் வெகுவிமர்சையாக கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 17ம் தேதி முதல் 4 நாட்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் இயங்காது என்று குடியரசு துணை தலைவரும், ராஜ்ய சபா சபாநாயகருமான வெங்கையா நாயுடு தெரிவித்தார். அதன்படி வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.