கடந்த வாரத்தில் பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 50 சதவீதம் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ளது.
ஆனால், அமைச்சர்கள் இந்த தரவை அகற்றிவிட்டு முன்னேற விரும்புகிறார்கள் என கொவிட் நிபுணர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஏழு நாட்களில், 444,201 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தை விட 48.1 சதவீத அதிகரிப்பு ஆகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட கொவிட் தொற்று கணக்கெடுப்பின் படி, ஜனவரி பிற்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியா முழுவதும் தொற்றுகள் அதிகரிப்பதைக் காட்டுகிறது.
இந்தநிலையில், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர், கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படுவதாக கவலை தெரிவித்தார்.
அரசாங்கம் தரவை அகற்றிவிட்டு முன்னேற விரும்புகிறது என்று குற்றம் சாட்டிய பேராசிரியர் ஸ்பெக்டர், தினசரி கொவிட் புள்ளிவிபரங்களை பதிவு செய்ய லண்டன் கிங்ஸ் காலேஜ் உருவாக்கிய ணுழுநு செயலி இப்போது இரத்து செய்யப்படுகிறது என கூறினார்.