எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட வேப்பம்பூவை பயன்படுத்தி பொடுகை முற்றிலுமாக விரட்டலாம்.
1. மருதாணி இலையை ஒரு கப் எடுத்துக்கொண்டு, அதனுடன் வெந்தயம், வேப்பிலை, துளசி, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி அரை எலுமிச்சை பழச்சாற்றை அக்கலவையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். எலுமிச்சைபழச் சாறுக்கு பதில் தயிரையும் இதற்குப் பயன்படுத்தலாம்.
நன்கு கலக்கப்பட்ட கலைவை தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தலைக்கு நன்கு அலசி குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாத காலம் செய்துவர பொடுகு தொல்லை போயே போய்விடும். இக்கலைவையைப் பயன்படுத்துவதால் தலைமுடியும் ‘கருகரு’வென நன்கு வளரும்.
2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.
இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.