சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ. 38,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் , அதாவது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய முதல் வாரத்தில் இந்தியாவில் தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக உயர்ந்தது. பின்னர் அடுத்த நாளே விலை குறைந்தது. பின்னர் தொடர்ந்து தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,869 க்கு விற்பனை ஆகிறது. நேற்று மாலை 4,894 ரூபாயாக இருந்த தங்கம் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி ரூ.39,160 ஆக இருந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.38,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 74 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,200 க்கு விற்பனையாகிறது.