வரவேற்பை பெற்ற ET திரைப்படம்
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா, இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பிரமாண்டமாக வெளியான இப்படம் அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்ற பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் முன்பு சூர்யா இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல இடங்களுக்கு சென்றார்.
சர்ச்சையை கிளப்பிய சூர்யாவின் பேச்சு
அதன்படி அப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக சூர்யா கலந்து கொண்டார், அப்போது சூர்யா பேசியதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஆம், சூர்யா அப்போது “தெலுங்கு திரையுலகம் தான் கொரோனா பரவலின் போது இந்தியா திரையுலகிற்கே எப்படி தைரியமாக இருப்பது என்பதை காண்பித்தது. அகன்தா முதல் பீம்லா நாயக் வரை தெலுங்கு படங்களை இந்தியளவில் வெளியிட்டு வந்தனர்.
மக்களும் அப்படங்களுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தனர், இதனால் தான் மற்ற திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் படங்களை வெளியிட நம்பிக்கை வந்தது” என பேசியுள்ளார்.
இதனையடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் Pandemic காலகட்டத்தில் 50 % இருக்கைகள் இருந்த போதிலும் மாஸ்டர் படத்தை வெளியிட்டு வெற்றிகண்டனர்.
இரண்டாவது அலைக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த, மாநாடு உள்ளிட்ட படங்களை தெரியமாக வெளியிட்ட உங்களுக்கு தெரியவில்லையா ! என கேள்வி எழுப்பிவருகின்றனர்.