தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.83 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டரியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், சீனா மட்டும் எளிதாக கையாண்டு வருகிறது. இதனாலயே சீனா கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்பிவிட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல குற்றம்சாட்டி வருகின்றன. வூஹானில் உள்ள உயிரியல் பகுப்பாய்வு மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தென் கொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிபர் தேர்தலின் காரணமாகவே அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிப்புக்கு மத்தியிலும் அந்நாட்டில் கடந்த 9-ம் தேதி திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் – ஐ தோற்கடித்து மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றூ ஒரே நாளில் அங்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 665 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 269 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் தொற்றினாலயே தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரிக்க காரணமாக சொல்லப்படுகிறது.