இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற்றி இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மயங் அகர்வால் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: மயங் அகர்வால், ரோகித் சர்மா (கேப்டன்), ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பந்த் ( விக்கெட் கீப்பர் ) ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.