சமச்சீரற்ற உணவு முறை மற்றும் இயந்திரமான வாழ்க்கைச் சூழல் ஆகியவை நமக்கு ஏராளமான உடல் நல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகின்றன.
சமச்சீரற்ற உணவு முறை மற்றும் இயந்திரமான வாழ்க்கைச் சூழல் ஆகியவை நமக்கு ஏராளமான உடல் நல பிரச்சினைகளை கொண்டு வந்து விடுகின்றன. இளைஞர்களிடையே உருவாகும் இளநரை என்பது அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றாகும். பொதுவாக 40 வயது ஆகும்போது முடி நரைக்க தொடங்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இன்றைய உலகில் 20 முதல் 30 வயதுக்கு உள்ளாகவே பலருக்கும் முடி நரைக்கத் தொடங்கி விட்டது.
சிலருக்கு இளநரை என்பது பரம்பரை ரீதியாக வரும் மரபுக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், பலரது இளநரை பிரச்சினைக்கு சத்தான சாப்பாடு, முறையான முடி பராமரிப்பு போன்றவை மேற்கொள்ளப்படவில்லை என்பதே காரணம் என தெரியவந்துள்ளது.
இளநரை வந்துவிட்டாலே நமக்கு வயது ஆகத் தொடங்கிவிட்டதோ என்ற கவலை தொற்றிக் கொள்கிறது. ஆனால், வீட்டில் உள்ள மூலிகைகளை வைத்தே இந்தப் பிரச்சினைக்கு மிக எளிமையாகவும், விரைவாகவும் தீர்வு காண முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான டிப்ஸ் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
சீயக்காய் :
கூந்தல் நலனுக்கு மிகச் சிறந்த தீர்வுகள் இதில் உண்டு. பொடுகு, நோய்த்தொற்று, முடி உதிர்தல் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. முடிக்கு வலுவூட்டி, பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இது உதவுகிறது. இளநரையை குறைக்க உதவிகரமாக இருக்கும்.
செம்பருத்தி :
இளநரையை கட்டுப்படுத்துவதில் முதன்மையான பங்கு செம்பருத்திக்கு உண்டு. செம்பருத்தி இலை மற்றும் பூ என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல தீர்வு கிடைக்க செம்பருத்தியை, எண்ணெயுடன் கலந்து தேய்த்து வரலாம்.