கோவாவில் 20 இடங்களில் முன்னிலை வகித்து வரும் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், சுயேட்சைகளின் ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது.
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மாத இறுதியில் முடிவடைய உள்ளதை அடுத்து அந்த மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் உள்ளது. கோவாவில் பாஜக, காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பாஜக 20 தொக்குதிகளிலும், காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கோவாவில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாஜக 20 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது. இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் பாஜக கோவாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி, பனாஜி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.