எரிபொருள் விலை உயர்வால் கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுக்காக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் என தொழில்துறை வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
டீசலின் அதிக விலையின் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு கடத்தப்படும் என்று மொத்த விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட கடைகளில் ஏற்படும் மற்ற அழுத்தங்களுக்கு மேல் ,து வருவதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால் குடும்பங்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், உலகப் பொருளாதார அதிர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.
ஒப்பந்தங்கள் டொலரில் செய்யப்படுவதால், விலைகள் முக்கியமாக கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலர் மாற்று வீதம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்த வாரம் ஒஎண்ணெய் ஒரு கட்டத்தில் பீப்பாய்க்கு 139 டொலர்களாக உயர்ந்தது. இது கிட்டதட்ட 14 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த அளவாகும்.