உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் ஆனது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதன்படி மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன.
மேலும், ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
தொடர்ந்து, உக்ரைனின் சுமி நகரில் வசிக்கும் குடிநீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோரை இந்தியத் தூதரகக் குழு பேருந்துகள் மூலம் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றி உள்ளது.
இதுமட்டுமின்றி கிழக்கு உக்ரைன் நகரமான செவெரோடோனெஸ்ட்கில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரியை கூறியதை சுட்டிக்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவில் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு கேலன் பெட்ரோல் விலை 4.173 டாலர்களாக அதிகரித்துள்ளது.