பொருளாதார சரிவில் உள்ள உக்ரைனுக்கு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நிதி வழங்கி உதவியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாட்டுக்கும் உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கடந்த 13 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போர் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி, சுரங்கங்கள் ,மெட்ரோ ரயில் நிலையங்கள் ,பதுங்கு குழிகள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ இந்திய மதிப்பில் ரூபாய் 77 கோடி நிதி வழங்கியுள்ளார். கடும் பொருளாதார வீழ்ச்சியை உக்ரைன் அரசு சந்தித்துள்ள நிலையில், தற்போது லியோனார்டோ அளித்துள்ள இந்த நிதி உதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டைட்டானிக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.