பாரதி கண்ணம்மா இருவரின் கல்யாண ஃபோட்டோ லட்சுமி கையில் தான் கிடைக்கிறது.
விஜய் டிவி-யில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இணையத்தில் உலா வரும் தகவலின் படி பாரதி மற்றும் கண்ணம்மா குறித்த உண்மையை லட்சுமி தான் கண்டுப்பிடிப்பார் போல.
பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோட்களில் அடுத்தடுத்து பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. 8 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி கண்ணம்மாவை ஏற்று கொள்வதாக கூறி, நிபந்தனை ஒன்றை பாரதி விதிக்க, இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான எபிசோட்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் வழக்கம் போல டாக்டர் பாரதி, கண்ணம்மா மீது சந்தேகம் கொண்டு, தனது சந்தேகம் உண்மை தான் என்பதை ஒப்பு கொண்டால் ஏற்று கொள்வதாக கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.அதே போல் தான் கடந்த வாரம் முழுவதும் கண்ணம்மாவின் பிறந்த நாள் எபிசோடை ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி இருந்தனர்.
ஆனால் கடைசியில் பாரதி மொத்த ஆட்டத்தை களைத்துவிட்டார். இப்படி இருக்கையில், இப்போது உண்மையை கண்டுப்பிடிக்கும் வேளையில் லட்சுமி இறங்கி விட்டார். இவ்வளவு நாட்களாக லட்சுமிக்கு பாரதி, சவுந்தர்யா, ஹேமா குறித்து ஏந்த சந்தேகமும் வந்ததில்லை. இப்படி இருக்கையில் தற்போது லட்சுமிக்கு இவர்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. அதே போல், கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம், ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒருபக்கம் தேடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவும் சவுந்தர்யாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து லட்சுமிக்கு, சவுந்தர்யா பாட்டி, அம்மா இவ்வளோ நெருக்கமாக பேசுகிறார்களே என சந்தேகம் கொள்கிறார். ஒருவேளை அப்பா பற்றிய உண்மை சவுந்தர்யாவுக்கு தெரிந்து இருக்குமோ எனவும் சந்தேகம் லட்சுமிக்கு வந்துவிட்டது.
இணையத்தில் உலா வரும் தகவலின் படி, லட்சுமி தான் மொத்த உண்மையும் கண்டுப்பிடிப்பார் என தெரிகிறது. பாரதி கண்ணம்மா இருவரின் கல்யாண ஃபோட்டோ லட்சுமி கையில் தான் கிடைக்கிறது. அதைப் பற்றிய உண்மையை சவுந்தர்யாவிடம் லட்சுமி கேட்க, 8 வருடமாக மறைத்த உண்மையை பற்றி சவுந்தர்யா தான் லட்சுமியிடம் சொல்வார் என தகவல்கள் கசிந்துள்ளன. அதுமட்டுமில்லை ஹேமா பற்றிய உண்மையையும் லட்சுமிக்கு தெரிந்து விடும் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.