இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியா முதல் அலை, 2ஆம் அலை, 3ஆ அலை என மக்களை வாட்டி எடுத்து விட்டது. இதில் முதல் 2 அலைகளில் பாதிப்பு அதிகம் இருந்தாலும், 3ஆம் அலையில் பெரியளவில் பாதிப்பு ஏதும் இல்லை. அதே சமயம் ஜூன் மாதம் முதல் 4 ஆம் அலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று 4,362 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று தினசரி தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து பதிவாகியுள்ளது . கடந்த 24 மணிநேரத்தில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 66 பேர் பலியாகினர். ஆனால் இன்று கொரோனா உயிரிழப்பானது 100ஐ தாண்டியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,15,210 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,24,06,150ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,948 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேபோல் இதுவரை 179.13 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.