‘சரண் அடையுங்கள்’ – உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு… தொடரும் பதற்றம்…

by Column Editor

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், கடைகளில் குறைந்த அளவு உணவுப் பொருட்களையே விநியோகம் செய்யுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், சரண் அடையுமாறு உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் மோதல் குறித்த சமீபத்திய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு பொதுமக்களை சிறைபிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சூழலில் சரண் அடையுமாறு உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் சரண்டர் அடையும் வரையில் ரஷ்யா தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று புதின் அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தத்தை மீறி பல இடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உணவு, தண்ணீர் இல்லாமல் உக்ரைன் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மைகோலாயிவ் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில் அதனை மீட்பதற்காக உக்ரைன் ராணுவத்தினர் தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவுக்கான சாலை மார்க்கம் மற்றும் உக்ரைனுக்கான துறைமுகம் என இந்த நகரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், கடைகளில் குறைந்த அளவு உணவுப் பொருட்களையே விநியோகம் செய்யுமாறு ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

போர் தொடங்கியது முதல் தற்போது வரை ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளதால், விரைவில் உக்ரைனை தனது கட்டுப்பாட்டிற்குள் ரஷ்யா கொண்டு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பேட்டி அளித்திருந்த அதிபர் புதின், ‘பேச்சுவார்த்தை அல்லது போர் மூலமாக தாங்கள் நினைத்ததை சாதிப்போம்’ என்று கூறியிருந்தார்.

போர் காரணமாக இரு தரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே 3வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment