அவசரமாக ரோகித் டிக்ளேர் செய்தது ஏன்? உண்மையை விளக்கிய ராக் ஸ்டார் ஜடேஜா!

by Editor News

இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்து இருந்தது.

பின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஜடேஜா 45 ரன்களுடனும், அஷ்வின் 10 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கிய வேளையில் அஸ்வின் அரைசதம் கடந்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் மறுபுறம் நங்கூரம் போல் விளையாடிய ரவீந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 228 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 175 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா திடீரென டிக்ளேர் அறிவித்தார்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முதல்முறையாக இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் என்ற நல்ல நிலையில் இருந்த போதே அவசரப்பட்டு ரோகித் சர்மா டிக்ளேர் செய்தது வேண்டுமென்றே ஜடேஜாவின் இரட்டை சதத்தை பறிப்பதாக தோன்றுகிறது என ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

மேலும், இந்த விடயத்தை சமூகவலைதளத்தில் பெரிய சர்ச்சையாக மாற்றினர். இந்நிலையில், இந்திய அணியின் இந்த டிக்ளேர் முடிவு குறித்து நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்னர் ஜடேஜா ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அதில், “நான் 150 ரன்களை தாண்டி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஓய்வு அறையில் இருந்து ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அதேபோன்று மைதானத்தின் தன்மை குறித்து நானும் ஒரு மெசேஜ் ஒன்றை அணி நிர்வாகத்திற்கு அனுப்பினேன்.

அதாவது, நான் 150 ரன்களை கடந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பந்து நன்றாக திரும்பத் தொடங்கியது. அதுமட்டுமின்றி பவுன்ஸ்சும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் ஆடுகளத்தின் தன்மை மாறுகிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.

உடனே டிக்ளேர் செய்தால் இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்யும்போது இந்த ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகியவை அவர்களை அச்சுறுத்தும் என்பதனாலும் ஒன்றரை நாட்கள் அவர்கள் பீல்டிங் செய்து வருவதால் சற்று சோர்வாக இருப்பார்கள் எனவே இந்த நேரத்தில் டிக்ளேர் செய்ய இதுதான் சரியான நேரம் என்று நானாகத்தான் ஓய்வு அறைக்கு மெசேஜ் அனுப்பினேன்.

அதன்பிறகு தான் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். மேலும், இதில் கேப்டனாக அவர் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை நான் கொடுத்த தகவலின் பேரிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில எந்த ஒரு சர்ச்சையான விடையும் கிடையாது என்ற விளக்கத்தை ஜடேஜா கொடுத்தார்.

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் பின் தங்கிய நிலையில் தற்போது பாலோ ஆன் பெற்று மூன்றாவது நாளில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.

ஜடேஜா கூறியதுபோலவே இலங்கை அணி தன் சூழலால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.

Related Posts

Leave a Comment